Wednesday, 5 October 2016

கேரட் காத்தி ரோல்/ கேரட் ஃப்ராங்கி

கேரட் காத்தி ரோல்/ கேரட் ஃப்ராங்கி

கேரட் காத்தி ரோல்/ கேரட் ஃப்ராங்கி

தேவையானவை:

 

பராத்தா செய்ய:

 

கோதுமை மாவு - 250 கிராம்

மைதா மாவு - 115 கிராம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

கோதுமை மாவு, மைதா மாவு இரண்டையும் பவுலில் சேர்த்து உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து மூடிபோட்டு அரை மணி நேரம் தனியாக வைக்கவும். இதை எட்டு சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.  பிறகு, இதை பராத்தாக்களாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். இதை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பராத்தாவாக சுட்டெடுக்கவும்.

 

ஸ்டஃபிங் செய்ய:

 

கேரட் - 2 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

பெரிய வெங்காயம் - 1  (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு  (பொடியாக நறுக்கவும்)

சீரகம் - 1 டீஸ்பூன்

தக்காளி - ஒன்றில் பாதி  (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

மைக்ரோவேவ் பவுலில் கால் கப் அல்லது அதற்கும் குறைந்தளவு தண்ணீர் வைத்து கேரட்டை வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து பொரிந்ததும், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கிய பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள் கொத்தமல்லித்தழை சேர்த்து, சில நிமிடம் வதக்கவும். பராத்தாவின் உள்ளே வைக்க ஸ்டஃபிங் ரெடி.

 

காத்தி ரோல் செய்ய:

 

எண்ணெய் - தேவையான அளவு

ஸ்டஃபிங் - 2 டேபிள் ஸ்பூன்

சுட்டு வைத்த பராத்தா - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 40 கிராம் (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி - சிறிய துண்டுகள்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

 

செய்முறை:

 

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, ஏற்ெகனவே தயார் செய்த பராத்தாவைப் போட்டு இரண்டு பக்கமும் சூடு செய்து வைக்கவும். இப்படி பொரித்த எல்லா பராத்தாக்களையும் சூடு செய்யவும். ஒரு தட்டில் பராத்தாவை வைத்து இதன் நடுவில் ஸ்டஃபிங் இரண்டு டேபிள்ஸ்பூன், இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லித்தழைச் சட்னி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை வைத்து, அப்படியே மடக்கி மேலே டூத் பிக்கை செருகி விடவும். இதை அப்படியே லஞ்ச் பாக்ஸில் வைத்தால், டூத் பிக்கை நீக்கிவிட்டு, குழந்தைகள் அப்படியே சாப்பிடுவார்கள்.

 

No comments:

Post a Comment