Wednesday 5 October 2016

வெஜ் பனீர் ரோல்

வெஜ் பனீர் ரோல்

வெஜ் பனீர் ரோல்

 

தேவையானவை:

 

சப்பாத்தி - 5

துருவிய பனீர் - 75 கிராம்

கேரட் - 1 (நீளமாக நறுக்கிய)

குடமிளகாய் - 1 (மீடியம் சைஸில் நறுக்கவும்)

பெரிய வெங்காயம் - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

கறிப்பவுடர் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் குடமிளகாயைச் சேர்த்து சில நிமிடம் வதக்கி கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வதங்கி மென்மையானதும், தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், கறிப்பவுடர், உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் துருவிய பனீரைச் சேர்த்து கரம் மசாலாத்தூளைத் தூவி சில நிமிடம் வதக்கி கொத்தமல்லித்தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும். கலவையின் சூடு ஆறியதும் ஒரு சப்பாத்தியின் நடுவில் கலவையை சிறிது எடுத்து வைத்து உருட்டி டூத் பிக்கால் குத்தி விட்டால், அருமையான வெஜ் பனீர் ரோல் ரெடி.

 

 

No comments:

Post a Comment