Sunday, 2 October 2016

தின் க்ரஸ்ட் வெஜிடபிள் பரோட்டா பீட்சா

தின் க்ரஸ்ட் வெஜிடபிள் பரோட்டா பீட்சா

தின் க்ரஸ்ட் வெஜிடபிள் பரோட்டா பீட்சா

 

பீட்சா பேஸ் செய்யத் தேவையானவை - பரோட்டா செய்ய மாவு பிசைந்துகொள்ளவும்.

பீட்சா சாஸ் செய்யத் தேவையானவை - வேகவைத்து தோல் உரிக்கப்பட்ட தக்காளி - 1 கப்

ஆலிவ் ஆயில்  - 1 டேபிள்ஸ்பூன்

உப்பில்லாத பட்டர்  - 1 டேபிள்ஸ்பூன்

பொடித்த கிராம்பு - சிறிதளவு

பூண்டு பற்கள் - சிறிதளவு

காய்ந்த ஆரிகேனோ - 1 டேபிள்ஸ்பூன்

பீட்சா சீசனிங் - 1/2 டீஸ்பூன்

மருவு (மர்ஜோரம்)  - 1/4 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய்த்தூள்  - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பேஸில் இலைகள் - இரண்டு

வெங்காயம் - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

 

டாப்பிங்க்ஸ் செய்யும் முறை :

 

ஏதாவது ஒரு காய்கறியை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். (உதாரணத்துக்்கு கேப்ஸிகம், நறுக்கிய வெங்காயம், காளான், பனீர் என ஏதாவது ஒன்று சேர்க்கலாம். இதில் பழங்களைக்கூட சேர்க்கலாம். பீட்சாவின் சைஸைப் பொறுத்து காய் மற்றும் பழங்களின் அளவுகள் மாறுபடும்) பர்மேசன் சீஸ் அல்லது மோஸரெல்லா சீஸ் துருவி சேர்த்துக் கொள்ளவும்.

 

சாஸ் செய்யும்முறை:

 

தக்காளியை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை நன்றாகக் கூழாக்கி தனியே வைக்கவும். பின்னர் ஒரு சாஸ்பேனில் பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக சூடானதும், இதில் வெங்காயக் கூழ் மற்றும் ஆரிகேனோ, மர்ஜோரம், பீட்சா சீசனிங், உப்பு எல்லாவாற்றையும் சேர்ந்து நன்றாகக் கலக்கவும். மூன்று நிமிடங்களில் கொதி வந்ததும், தக்காளி, பேஸில் இலைகள், சர்க்கரை எல்லாம் சேர்க்கவும். தீயைக் குறைத்து, (தயாரிக்கும் சாஸ் பாதியாகக் குறையும் வரை) நன்றாகக் கலக்கவும். பிறகு, இறக்கியதும் நன்றாக ஆறவைத்து, ஒரு கன்டெய்னரில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவும்.

பின்னர் பரோட்டாவுக்குப் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து, சுமார் 12 அங்குல வட்டவடிவமாகத் தட்டிக் கொள்ளவும். கால் அங்குல கணம் இருந்தால் போதும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, பரோட்டாவை அதில் போட்டு, இரண்டு அல்லது மூன்று கப் சாஸை அதன் மீது பரவலாக விடவும். ஒரங்களிலிருந்து அரை அங்குலம் விட்டு விட்டு சாஸை பரப்ப வேண்டும். டாப்பிங்க்ஸ் செய்யக் கொடுத்துள்ளவற்றை இதன் மீது பரப்பவும். பிறகு 5 நிமிடம் அப்படியே தோசைக் கல்லில் வைத்து வேகவிடவும். பீட்சா தயாராகும் வரை கவனமாகப் பார்க்கவும். பிறகு, துண்டு போட்டு பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment