Sunday, 2 October 2016

வீச்சு பரோட்டா வெஜிடபிள் நூடுல்ஸ்

வீச்சு பரோட்டா வெஜிடபிள் நூடுல்ஸ்

வீச்சு பரோட்டா வெஜிடபிள் நூடுல்ஸ்

 

தேவையானவை :

 

பரோட்டா - 1

எண்ணெய் -  2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - கால் கப்

சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1

மெல்லிதாக நறுக்கிய காய்கறிகள் - 2 கப் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கேப்ஸிகம்)

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வினிகர் - அரை டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் அல்லது

கடலை எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 

செய்முறை :

 

பரோட்டாவை சுருட்டி நறுக்கிக் கொள்ளவும்.இது பார்ப்பதற்கு நீள நீளமாக, பட்டையான நூடுல்ஸ் போல இருக்கும். ஒரு கடாயில் மூக்கால் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். நன்றாக சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனையும் மற்றும் வெங்காயத்தையும் போட்டு 1 நிமிடம் வதக்கவும். பிறகு, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், பச்சைமிளகாய் பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து, தயாரித்து வைத்திருக்கும் பரோட்டா நூடுல்ஸ், வினிகர் சேர்ந்து நன்றாக சூடுபடுத்தி, பூண்டு சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment