Monday, 3 October 2016

செட்டிநாடு குழிப்பணியாரம்

செட்டிநாடு குழிப்பணியாரம்

செட்டிநாடு குழிப்பணியாரம்

 

தேவையானவை:

 

இட்லி மாவு - 2 கப்

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்-கால் கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். பின்னர், இதை இட்லி மாவோடு சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பணியாரச்சட்டியில் இரண்டு சொட்டு எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்திருக்கும் மாவை  ஊற்றவும். இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment