Monday 3 October 2016

சாமை - நாட்டுக்கோழி பிரியாணி

சாமை - நாட்டுக்கோழி பிரியாணி

சாமை - நாட்டுக்கோழி பிரியாணி

 

தேவையானவை:

 

 சாமை - ஒரு கப்

 நாட்டுக்கோழி - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 புதினா - கால் கப்

 கொத்தமல்லித்தழை - கால் கப்

 ஏலக்காய் - 2

 பட்டை - சிறிய துண்டு

 கிராம்பு - 2

 கல்பாசி - 1 சிறிய துண்டு

 மிளகு - அரை டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன்

 நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

சாமை அரிசியை நன்றாக‌க் கழுவி வைக்கவும். நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

இத்துடன் வேகவைத்த கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, கோழி வேகவைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் தண்ணீர்) கொதிக்கவிடவும். இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

கர்ப்பிணிபெண்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு இது.சாமை உடலில் உள்ள சர்க்கரைச்சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. கோழி வேகவைத்த தண்ணீரின் அளவு 2.5 கப் வரவில்லை என்றால், வெறும் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment