Monday 3 October 2016

சாரணைவேர் சாறு

சாரணைவேர் சாறு

சாரணைவேர் சாறு

 

தேவையானவை:

 

 சாரணைவேர் - 2 இஞ்ச் நீளத்துண்டு

 சுக்கு - 1 சிறிய துண்டு

 இடித்த கருப்பட்டி - 2 டீஸ்பூன்

 வெண்ணெய் - கால் டீஸ்பூன்

 

செய்முறை:

 

சாரணைவேர், சுக்கு இரண்டையும் லேசாக தட்டி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து 500 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 30 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். பிறகு கருப்பட்டி சேர்த்து கிளறி கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும். சாறு சூடாக இருக்கும்போதே வெண்ணெய் சேர்த்து கிளறி கரைந்ததும் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் உடம்பில் நீர் சத்து தேங்கும். அப்படி சேர்ந்த‌ தேவையில்லாத நீர் உடம்பிலிருந்து வெளியேர இந்த பானம் உதவும். மகப்பேறு காலத்தின் இறுதி மாதங்களில் மட்டுமே இதை பருக வேண்டும்.

 

 

No comments:

Post a Comment