Monday 3 October 2016

ரோஸ் - குங்குமப்பூ பால்

ரோஸ் - குங்குமப்பூ பால்

ரோஸ் - குங்குமப்பூ பால்

 

தேவையானவை:

 

 பன்னீர் ரோஜா - 5

 பால் - 500 மில்லி

 பாதாம் -

 குங்குமப்பூ - சிறிதளவு

 தேன் - 2  டீஸ்பூன் (தூள் செய்த‌ பனங்கற்கண்டும் சேர்க்கலாம்)

 

செய்முறை:

 

பாதாமை ஒரு பவுலில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் பாதாமை சிறிது தண்ணீர் சேர்த்து கூழாக அரைத்துக்கொள்ளவும். பன்னீர் ரோஜாவிலிருந்து இதழ்களை மட்டும் உதிர்த்து எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும். அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி பன்னீர் ரோஜா இதழ்களைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதழ்கள் வெந்ததும், அரைத்த பாதாம், குங்குமப்பூ சேர்த்துக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி தேன் சேர்த்துப் பரிமாறவும். இதழ்களை வடிகட்ட வேண்டாம்.

 

குறிப்பு:

 

இதனை மகப்பேறு காலத்தின் இறுதி மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் குடித்து வர ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

No comments:

Post a Comment