Monday, 3 October 2016

மெக்சிகன் ரைஸ்

மெக்சிகன் ரைஸ்

மெக்சிகன் ரைஸ்

 

தேவையானவை:

 

 பாசுமதி அரிசி - ஒரு கப்

 தண்ணீர் - 2 கப்

 குடமிளகாய் - 1

(நீளவாக்கில் நறுக்கவும்)

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 தக்காளி - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

 

செய்முறை:

 

ஒரு மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் எண்ணெயுடன் பாதி அளவு குடமிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியில் பாதியளவு சேர்த்து ஹைபவரில் 2 நிமிடங்கள் அவனின் உள்ளே வைத்து எடுக்கவும். அத்துடன் அரிசி, தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி மீண்டும் ஹைபவரில் 12 நிமிடம் பாத்திரத்தை மூடி வைத்து சமைத்து எடுக்கவும். ஆறு நிமிடங்கள் ஆகும்போதே இடையில் ஒரு முறை திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடி போட்டு சமைக்கவும். பிறகு வெளியே எடுத்து மீதமுள்ள நறுக்கிய தக்காளி மற்றும் குடமிளகாயை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

 

குறிப்பு:

 

பாத்திரத்தை மூடி சமைப்பதால் சாதம் வறண்டு போகாமல் இருப்பதோடு சீக்கிரமாக வெந்துவிடும். மெக்சிகன் மக்கள் இத்துடன் ராஜ்மா கிரேவியை வைத்து பரிமாறுவார்கள்.

 

No comments:

Post a Comment