Monday, 3 October 2016

ஷ்ரூஸ்பரி

ஷ்ரூஸ்பரி

ஷ்ரூஸ்பரி

 

தேவையானவை:

 

 மைதா - அரை கப்

 பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

 வெண்ணெய் - கால் கப்

 லெமன் எசன்ஸ் - அரை டீஸ்பூன்

 ஃபுட் லெமன் யெல்லோ கலர் - சிறிது

 செர்ரிப்பழம் - அலங்கரிக்க

 

செய்முறை:

 

ஒரு பவுலில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, முட்டை அடித்து கலக்கும் கருவியால் கலவை புசு புசு என்று வரும் அளவு நுரைக்க அடித்துக்கொள்ளவும். இனி தேவையானவற்றில் கொடுத்துள்ள செர்ரிப்பழம் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் வெண்ணெய் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். பிசைந்த மாவை கையால் கால் இஞ்ச்  உயரத்துக்கு வட்டமாக தட்டி வைக்கவும்.

 

பிறகு பிஸ்கட் கட்டரால் ஒவ்வொரு பீஸாக கட் செய்து அதன் மேல் செர்ரிப்பழத்தை நறுக்கி வைக்கவும். பிறகு, பேக்கிங் டிரேயில் சிறிது வெண்ணெய் தடவி மேலே மைதாவை தூவவும். பிஸ்கட்டுகளை டிரேயில் வைத்து அவனை மூடவும். கன்வெக்‌ஷன் மோடில் 180 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். மிகவும் ருசியாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும் இந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 

குறிப்பு:

 

பிஸ்கட் கட்டர் இல்லையென்றால் ஏதாவது ஒரு டப்பாவின் சிறிய வட்டமான மூடியால் மாவின் மேல் வைத்து அழுத்தினால் வட்ட வடிவம் கிடைக்கும்.

 

No comments:

Post a Comment