Monday, 3 October 2016

கோல்டு காயின்ஸ்

கோல்டு காயின்ஸ்

கோல்டு காயின்ஸ்

 

தேவையானவை:

 

 பிரெட் ஸ்லைஸ் - 6

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 வெண்ணெய் - தேவையான அளவு (பிரெட் மேல் தடவ)

 உருளைக்கிழங்கு - 2

 வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 கேரட் - ஒன்று (துருவிக்கொள்ளவும்)

 சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

 வினிகர் - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை எள் - மேலே தூவ

 தக்காளி சாஸ் - அலங்கரிக்க

 

செய்முறை:

 

உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி, மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் வைக்கவும். அத்துடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு 4 நிமிடங்கள் ஹை பவரில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவைத்து, தோலுரித்து மசித்து வைக்கவும். மற்றொரு அவன் பாத்திரத்தில் எண்ணெய், வெங்காயம் சேர்த்துக் கலக்கி அவன் உள்ளே வைத்து 2 நிமிடம் ஹை பவரில் வேக வைத்து எடுக்கவும்.

பிறகு கேரட் துருவல் சேர்த்துக் கலந்து ஹை பவரில் 2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் இத்துடன் மசித்த உருளை, சோயா சாஸ், வினிகர், உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் ஹை பவரில் வேகவைத்து எடுத்து கலவையை ஆற விடவும்.

 

பிரெட் ஸ்லைஸை ஒரு மூடியாலோ அல்லது வட்ட பிஸ்கட் கட்டராலோ வட்டமாக கட் செய்து, அதன் இருபுறமும் வெண்ணெய் தடவிக்கொள்ளவும். இவற்றை ஒரு மைக்ரோவேவ் டிரே அல்லது பாத்திரத்தில் அடுக்கி அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை சிறிது வைத்து எள் தூவி கன்வெக்‌ஷன் மோடில் 180 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடம் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும். பிறகு சிறிது தக்காளி சாஸ் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

 

குறிப்பு:

 

இதை வட்டமாக செய்வதால் காயின்ஸ் என்கிறோம். உங்களுக்கு விருப்பமான வடிவத்திலும் இந்த ரெசிப்பியை செய்யலாம்.

 

No comments:

Post a Comment