சில்லி சப்ஜி
சில்லி சப்ஜி
தேவையானவை
பஜ்ஜி மிளகாய்- 150 கிராம்
எண்ணெய்- 15 மில்லி
வெங்காயம், தக்காளி - 2
கடுகு- 50 கிராம்
சீரகம் - 15 கிராம்
உளுந்து- 5 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
செய்முறை :
பஜ்ஜி மிளகாயைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து எடுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து 10 மில்லி தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் தனியாக வேகவைத்த பஜ்ஜி மிளகாயைப் பொரித்து எடுக்கவும்.

No comments:
Post a Comment