Saturday, 1 October 2016

கரஞ்சி

கரஞ்சி

கரஞ்சி

 

தேவையானவை:

மேல் மாவுக்கு:

 மைதா மாவு - ஒரு கப்

 உப்பு - சிறிதளவு

 பால் - 5 டேபிள்ஸ்பூன்

 

பூரணத்துக்கு:

 துருவிய தேங்காய் - ஒரு கப்

 நெய் - 4 டீஸ்பூன்

 பொடித்த சர்க்கரை - கால் கப்

 ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

 வறுத்த எள் - 2 டேபிள்ஸ்பூன்

 பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை- தலா 10

 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை:

மைதா மாவை உப்பு, பால், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து (சப்பாத்தி மாவு பதம்) அரை மணி நேரம் ஊற விடவும். மேலே ஒரு வெள்ளைத் துணியால் மூடவும். வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பாதாம், முந்திரிப்பருப்பு இவற்றை கொரகொரப்பாகப் பொடிக்கவும். வறுத்த தேங்காய், பொடித்த முந்திரி, பாதாம், சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள், உலர்ந்ததிராட்சை, ஜாதிக்காய்த்தூள் எள் இவற்றை ஒன்றாகக் கலக்கினால் பூரணம் தயார். பிசைந்து வைத்த மேல் மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்துத்தட்டி, மெல்லிய பூரிகளாக இட்டு ஒரு புறத்தில், ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து பூரியின் விளிம்புக்கு முன்பே மூடி விடவும். மீதி பகுதியை கைகளால் மொத்தமாக முறுக்கி விடவும். நன்றாக அழுத்தி விடவும். எண்ணெயைக் காய வைத்து இரண்டு இரண்டாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இது 10 தினங்கள் வரை கெடாது.

 

No comments:

Post a Comment