லட்டு
லட்டு
தேவையானவை:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
லெமன் ஃபுட்கலர் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்பொடி - அரை டீஸ்பூன்
நெய் - 6 ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உடைத்த முந்திரிப் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தேய்க்கவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வெந்த பூந்திகளை வடிசட்டியில் போடவும். எண்ணெய் நன்றாக வடிந்து விடும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை, நீர் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து பாகு தயாரிக்கவும். ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். பாகு கொதிக்கும்போது இடையிடையே நெய் விடவும். பாகு கொதி வந்ததும் இறக்கி மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். பூந்தியைச் சேர்த்து நன்றாகக் கலந்து லட்டாகப் பிடிக்கவும். இதை விநாயகர் சதூர்த்தியில் அவருக்குப் படைப்போம்.

No comments:
Post a Comment