Saturday, 1 October 2016

சிவ்டா

சிவ்டா

சிவ்டா

 

தேவையானவை:

 வெள்ளை அவல் - 200 கிராம்

 வேர்க்கடலை - 25 கிராம்

 முந்திரிப்பருப்பு - 10 கிராம்

 பொட்டுக்கடலை - 50 கிராம்

 பல்பல்லாகக் கீறிய தேங்காய்

- 6 டேபிள்ஸ்பூன்

 திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்

 நறுக்கிய பச்சைமிளகாய்

- 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்)

- அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அவலை, கொஞ்சம் கொஞ்சமாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள எண்ணெயையும் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் என ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து பிறகு வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை தேங்காய் என ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து உப்பு சேர்த்து மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து இறுதியில், வறுத்த அவலையையும் சேர்த்துக் கலந்து இறக்கி, உலர் திராட்சையையும் கலந்து விடவும். இதுவே அவல் சிவ்டா.

 

No comments:

Post a Comment