பாலடை பகளாபாத்
பாலடை பகளாபாத்
தேவையானவை:
பாலடை - அரை கப்
வடித்த சாதம் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
புளிக்காத தயிர் - ஒரு கப்
பால் - கால் கப்
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
அலங்கரிக்க:
கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பாலடையை ஒரு கப் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் சாதம், கால் கப் பால் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்த்து வேக விடவும். சாதம், பாலடை இரண்டுமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறியதும் தயிரைச் சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரிக்கவும்.
குறிப்பு:
இந்த வித்தியாசமான பாலடை பகளாபாத்தை பார்ட்டிகளிலும், வீட்டு விசேஷங்களிலும் செய்து அசத்த ஏற்றது. ஊறுகாய் (அ) மோர்மிளகாயைத் தொட்டுக்கொண்டு சுவைக்க மிகவும் ஏற்றது.

No comments:
Post a Comment