Tuesday, 4 October 2016

ஆலூ டிக்கி

ஆலூ டிக்கி

ஆலூ டிக்கி

 

தேவையானவை:

 

வேக வைத்த உருளைக்கிழங்கு 2 (மீடியம் சைஸ்)

 

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)

 

பச்சை மிளகாய்  2

 

கொத்தமல்லித்தழை  சிறிதளவு

 

புதினா சிறிதளவு

 

மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள்  கால் டீஸ்பூன்

 

கரம் மசாலாத்தூள்  கால் டீஸ்பூன்

 

சாட் மசாலாத்தூள்  அரை டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

எண்ணெய்  தேவையான அளவு

 

செய்முறை:

 

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் பிசைந்து வைக்கவும். இத்துடன் தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் கலந்து நன்கு பிசையவும். இதை பெரிய எலுமிச்சை அளவுக்கு எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்துத் தட்டவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு தட்டிய உருளைக்கிழங்கு கலவையை வைத்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான 'ஆலு டிக்கி' ரெடி..

 

 

No comments:

Post a Comment