இளநீர் பாயசம்
இளநீர் பாயசம்
தேவையானவை:
இளநீர் 4 (இளநீர் வழுக்கையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்)
தேங்காய்ப்பால் 500 மில்லி
சர்க்கரை தேவையான அளவு
ஏலக்காய் 4
முந்திரிப்பருப்பு தேவையான அளவு
திராட்சை (கிஸ்மிஸ்) தேவையான அளவு
செய்முறை:
இளநீரை தனியாகவும், உள்ளே இருக்கும் வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். சிறிதளவு வழுக்கையை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும். மீதமுள்ள வழுக்கையை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். கூடவே சர்க்கரை மற்றும் ஏலக்காயைச் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இதை தேங்காய்ப்பாலில் சேர்த்துக் கலக்கி இளநீர், நறுக்கிய வழுக்கை, முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். (மற்ற பாயசம் போல திக்காக இல்லாமல், தண்ணீராக இருக்கும் இந்த பாயசம்)

No comments:
Post a Comment