Sunday, 2 October 2016

கோழி சுட்டது

கோழி சுட்டது

கோழி சுட்டது

 

தேவையானவை:

 சதைப்பகுதியுடன் கூடிய கோழி கால் - 4

 தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

 சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை

 மஞ்சள்தூள் - 5 கிராம்

 இஞ்சி  - 50 கிராம்

 பூண்டு - 50 கிராம்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி கழுவி பேஸ்ட்டாக அரைக்கவும். தேவையானவற்றில் எண்ணெய், கோழி நீங்கலாக உள்ள மற்ற பொருட்களுடன் இஞ்சி பேஸ்ட்டை கலந்து கோழி கால்கள் மீது நன்கு தடவவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சிறிது எண்ணெய் தெளித்து, கோழிக்கால்களை அதில் வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பின்னர் நேரடியாக தீயில் இருபுறமும் சில நிமிடம் காட்டி எடுத்துப் பரிமாறவும்.

'மைக்ரோ-அவன்' வைத்திருப்பவர்கள் கோழிக் காலை அவனின் உள்ளே இருபது நிமிடம் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

 

No comments:

Post a Comment