காலிகட் சிக்கன் பிரியாணி
காலிகட் சிக்கன் பிரியாணி
தேவையானவை:
சிக்கன் (கோழிக்கறி) - அரை கிலோ
தயிர் - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 25 கிராம்
புதினா - 25 கிராம்
கறிவேப்பிலை - 10 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 25 கிராம்
பூண்டு - 20 கிராம்
இஞ்சி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
கசகசா பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
சாதத்துக்கு:
வெண்ணெய்/ நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - 5
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் - 4
கறிவேப்பிலை - 4
பெரிய வெங்காயம் - 1
கிராம்பு - 4
சீரகச் சம்பா அரிசி - 250 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா:
வெண்ணெய்/ நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் - 4
பட்டை - 5
ஜாதிக்காய் - 1
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 1
செய்முறை:
சிக்கனை (கோழிக்கறி) கழுவி விருப்பமான வடிவில் நறுக்கி வைக்கவும். தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சிக்கனுடன் கலந்து அரை மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை, கிராம்பு, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் அரிசியைக் கழுவி சேர்த்து உப்பு போட்டுக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் குறைவான தீயில் 15 நிமிடம் அரிசியை வேக விட்டு எடுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் / நெய்யை சூடாக்கி, மாசாலாவுக்குத் தேவையானவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இத்துடன் ஊற வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து தீயை முற்றிலும் குறைத்து 10 நிமிடம் கிரேவி திக்காக மாறும் வரை, வேக விடவும். ஒரு ப்ளேட்டில் ஒரு லேயர் சாதம், இதன் மேல் சிக்கன் கிரேவி, இதன் மேல் ஒரு லேயர் சாதம் என்கிற ரீதியில், பரப்பி ரைத்தாவோடு பரிமாறவும்.

No comments:
Post a Comment