Wednesday, 5 October 2016

செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை (இரண்டு ஃபிஷ் ஃப்ரை செய்ய)

செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை (இரண்டு ஃபிஷ் ஃப்ரை செய்ய)

செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை (இரண்டு ஃபிஷ் ஃப்ரை செய்ய)

 

தேவையானவை:

 

மீன் - 2 பீஸ்கள்  (சுத்தம் செய்தது)

செட்டிநாடு மீன் ஃப்ரை மசாலா - 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2 (தோல் நீக்கி வைக்கவும்)

மஞ்சள்தூள் - சிறிதளவு

பூண்டுப் பல் - 2 (தோல் நீக்கி வைக்கவும்)

இஞ்சி - சிறிய துண்டு (தோல் நீக்கி வைக்கவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு (விருப்பப்பட்டால்)

உப்பு - 1 டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)

 

செட்டிநாடு மீன் ஃப்ரை மசாலா செய்ய:

 

சீரகம் - 2 கிராம்

சோம்பு - 2 கிராம்

மல்லி (தனியா) - 6 கிராம்

மிளகு - 2 கிராம்

மிளகாய் வற்றல் - 6

உப்பு - 2 கிராம் (விருப்பப்பட்டால்)

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 

செய்முறை:

 

மீனைக் கழுவி மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கைகளால் தேய்த்து, இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் தண்ணீர் விட்டு மீனைக் கழுவி வைக்கவும். செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை மசாலாவுக்குக் கொடுத்தவற்றில் உப்பு நீங்கலாக உள்ள அனைத்தையும், குறைந்த தீயில் முப்பது நொடிகள் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறியதும், மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். அரைத்தவற்றை சலித்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். இந்த பேஸ்ட்டோடு, உப்பு, செட்டிநாடு மசாலாவை 2 டீஸ்பூன் சேர்த்துக் கலந்து வைக்கவும். இதை மீனின் மேல் சிறிது கறிவேப்பிலையோடு கலந்து தேய்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். காலையில் பொரிக்க நினைப்பவர்கள் இரவே ஃப்ரிட்ஜில் மீன் வைப்பதற்கான ட்ரேயில் வைத்துவிட்டால், மசாலா நன்கு உள்ளே இறங்கி விடும். காலையில் பொரிக்கலாம். இனி மசாலா தடவிய மீனை எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டுப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment