புதினா துவையல்
புதினா துவையல்
தேவையானவை:
புதினா ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை 2 கைப்பிடி
கடலைப்பருப்பு
ஒன்றரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் சிறிது
பச்சை மிளகாய் 7
புளி சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி ஒரு சின்ன பீஸ் (தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்)
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து வறுத்துவிட்டு இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில், தேவையான அளவு உப்பு, லேசாக தண்ணீர் விட்டு அரைத்து பவுலில் வைத்து பரிமாறவும்.

No comments:
Post a Comment