Wednesday, 5 October 2016

மா இஞ்சி ஊறுகாய்

மா இஞ்சி ஊறுகாய்

 

தேவையானவை:

 

மா இஞ்சி  200 கிராம்

 

நல்லெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

 

கடுகு  அரை டீஸ்பூன்

 

காய்ந்த மிளகாய்  10

 

வெந்தயம்  அரை டீஸ்பூன்

 

புளி  எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டி வைக்கவும்)

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை வறுத்து அரைத்து வைக்கவும்.

 

மா இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி, துருவி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போனதும் அரைத்தவற்றைச் சேர்த்து உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment