Wednesday, 5 October 2016

பகளாபாத்

பகளாபாத்

பகளாபாத்

 

தேவையானவை:

 

பச்சரிசி  100 கிராம்

 

பால்  250 மில்லி

 

வெண்ணெய்  30 கிராம்

 

ஃப்ரெஷ் க்ரீம்  50 மில்லி

 

தயிர்  50 மில்லி

 

உப்பு  தேவையான அளவு

 

தாளிக்க‌:

 

கடுகு  1 டீஸ்பூன்

 

நெய்  1 டேபிள்ஸ்பூன்

 

கடலைப்பருப்பு  1 டீஸ்பூன்

 

பச்சை மிளகாய்  2 (பொடியாக நறுக்கவும்)

 

இஞ்சி  சிறிது (பொடியாக‌ நறுக்கவும்)

 

பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்

 

செய்முறை:

 

அரிசியைக் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து உப்பு போட்டு வேக விடவும். சாதம் நன்கு வெந்ததும் 200 மில்லி பாலைச் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டும் சேர்த்து பொங்கல் பதத்துக்கு வந்ததும் வெண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து, சாதத்தில் சேர்த்துக் கிளறவும். மீதம் இருக்கும் பாலை ஆறிய சாதத்தில் சேர்த்து தயிர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 

No comments:

Post a Comment