சாய் சுக்டா
சாய் சுக்டா
தேவையானவை:
பிரெட் 10
பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
மில்க்மெய்ட் 50 கிராம்
நெய் சிறிதளவு
முந்திரிப்பருப்பு சிறிதளவு
பிஸ்தா சிறிதளவு
பாதாம் சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கோவா 100 கிராம் (காய்ச்சிய பாலில் சிறிது சேர்த்து மிக்ஸியில் ஓட்டி வைக்கவும்)
செய்முறை:
பிரெட்டை நெய்யில் வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து அரை லிட்டராகும் வரை கொதிக்க விடவும். அரை லிட்டரானதும், சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விட்டு பின் மில்க்மெய்ட், கோவா சேர்த்து கலக்கினால் கலவை திக் ஆகும். ஒரு டிரேவில் பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, பால் கலவையை ஊற்றி பாதாம், முந்திரி பிஸ்தா தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment