Sunday 9 October 2016

ஸ்பெஷல் மலாய் பனீர்

ஸ்பெஷல் மலாய் பனீர்

ஸ்பெஷல் மலாய் பனீர்

 

என்னென்ன தேவை?

 

பனீர் - 250 கிராம்,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

வெங்காயம் - 2, தக்காளி - 2,

இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,

தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,

சீரகம் வறுத்துப் பொடித்தது - 1/2 டீஸ்பூன்,

வெண்ணெய் - 1/2 கப்

கிரீம் - 1/4 கப்,

பொடித்த பட்டை,

லவங்கம் - 1/4 டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,

முந்திரி - 8 (விழுதாக அரைக்கவும்).

 

குறிப்பு:

 

மேலும் பார்ட்டி, விழாக்களுக்கு  ரிச்சாக செய்ய வேண்டும் என்றால் இனிப்பு இல்லாத பால்கோவா - 1/2 கப்.

 

எப்படிச் செய்வது?

 

வெங்காயத்தையும், தக்காளியையும் தனித்தனியாக அரைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயை சூடாக்கி சீரகம் தாளித்து, அத்துடன் வெங்காயம் வதக்கவும். அது

பச்சை வாசனை போனதும், இஞ்சி, பூண்டு விழுது அதற்கு பின் தக்காளி, பட்டை, லவங்கம், பச்சைமிளகாய் இப்படி 2 நிமிடம் வதக்கவும். தூள்களை சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து மேல் வந்ததும், முந்திரி விழுதையும் (விரும்பினால் பொடித்த கோவாவையும்) சேர்த்து கிரேவியாக வரும்போது பனீரை கழுவி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து வடித்து கிரேவியில் சேர்த்து ஒரே கொதி வந்ததும் இறக்கி கிரீம் சேர்த்து பரிமாறவும். தக தகவென்று சாஃப்ட்டாக மிக அருமையாக இருக்கும் இந்த மலாய் பனீர்.

 

குறிப்பு:

 

விரும்பினால் கொத்தமல்லியை மிகப் பொடியாக நறுக்கி தூவவும். பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டி, நாண், புலாவுடன் ஸ்பெஷல் ஃபங்ஷனில் ராஜஸ்தானியர்கள் பரிமாறுவார்கள். கல்யாணத்தில் இது கண்டிப்பாக இருக்கும். பார்ட்டியிலும் களைக்கட்டும்

No comments:

Post a Comment