ஹைதராபாத் வெஜ் பிரியாணி
ஹைதராபாத் வெஜ் பிரியாணி
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 1,
சேனைக்கிழங்கு - நீளவாக்கில் 2 இன்ச் சைஸில் அரிந்தது 6 துண்டு,
சேப்பங்கிழங்கு - 1,
காலிஃப்ளவர் - சிறிது,
பிரக்கோலி - சிறிது,
பீன்ஸ் - 5,
பலாக்காய் - 4 சிறிய துண்டுகள்,
சோயா - 6,
உப்பு - சிறிது,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.
மசாலா...
தயிர் - 100 மிலி,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
ஷா ஜீரா - 1 டீஸ்பூன்,
புதினா - சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
பட்டை - 1,
கிராம்பு - 2,
ஏலம் - 1,
ஜாதிக்காய், ஜாதிபத்திரி பொடி - தலா ஒரு சிட்டிகை,
பிரிஞ்சி இலை - 1,
பெரிய ஏலக்காய் - 1.
அரிசி வேக வைக்க...
தரமான பாசுமதி அரிசி - 300 கிராம்,
பட்டை சிறியது - 1,
கிராம்பு - 1,
ஏலம் - 1,
ஷா ஜீரா - 1/2 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் - 1/2 + 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/4 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 3.
எப்படிச் செய்வது?
அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வதக்கி வைத்துக்கொள்ளவும். காய்கறி வகைகளை அரிந்து கழுவி சிறிது நெய்யில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும் (அரை பதம் வதக்கினால் போதும்) வதக்கிய காயில், கொடுத்துள்ள அனைத்து மசாலா வகைகளையும் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் அரிசியுடன் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா சேர்த்து ரொம்ப வேக வைக்காமல் முக்கால் வேக்காடு வேகவைத்து சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து கலக்கி விட்டு வடிக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் + எண்ணெய் விட்டு வதக்கிய காய்கறிகளை பரவலாக வைத்து அதன் மேல் வடித்த அரிசியை தட்டி, வறுத்த வெங்காயத்தை தூவி, கொத்தமல்லி, புதினா தூவி, ரெட் கலர் பொடி, சிறிது லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன் கலக்கி தெளித்து மூடி போட்டு சிறு தீயில் வைத்து 40 நிமிடம் தம் போடவும். சுவையான ஹைதராபாத் வெஜ் பிரியாணி ரெடி.
No comments:
Post a Comment