Sunday 9 October 2016

மேத்தி பாலக், பனீர் - மட்டர் சப்ஜி

மேத்தி பாலக், பனீர் - மட்டர் சப்ஜி

மேத்தி பாலக், பனீர் - மட்டர் சப்ஜி

 

இந்த சப்ஜி குளிர்காலத்தில் காய்கள் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் போது கண்டிப்பாக எல்லா வீடுகளிலும் செய்வார்கள்.

 

என்னென்ன தேவை?

 

தில்லி பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு,

வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு,

பனீர் - 100 கிராம்,

வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்,

வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1,

முழு முந்திரிப்பருப்பு - 6,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,

வறுத்து பொடித்த சீரகத்தூள்,

கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

 

தாளிப்பதற்கு...

 

சீரகம், எண்ணெய் - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

 

முந்திரியை ஊறவைத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைக்கவும். வெந்தயக் கீரையை பொடிக்கவும். கொதிக்கும் தண்ணீரில் 1 டீஸ்பூன் சர்க்கரை கலந்து அதில் பாலக்கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும். தண்ணீரை வடித்து ஐஸ் தண்ணீரில் போட்டு பிழிந்து அரைக்கவும். அதே போல் பனீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும். மேல் கொடுத்த பொடிகள் அனைத்தையும் சேர்க்கவும்.

 

தாளிக்க...

 

கடாயை காய வைத்து வெண்ணெய் / எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, முந்திரி மற்றும் வெந்தயக்கீரை, பொடிகள் அனைத்தையும் சேர்த்து கொதித்து வரும்போது பாலக், பனீர், பட்டாணி, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

 

குறிப்பு:

 

எண்ணெய்/வெண்ணெய் கலந்து சேர்க்கலாம். மேலும் ரிச்சாக இருக்க க்ரீம் சேர்க்கலாம்

No comments:

Post a Comment