Monday, 3 October 2016

நாட்டுக் கோழிச்சாறு

நாட்டுக் கோழிச்சாறு

நாட்டுக் கோழிச்சாறு

 

தேவையானவை:

 

 நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது)

 சின்னவெங்காயம் - 3

 நாட்டுத் தக்காளி - 1

 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன் (தட்டி வைக்கவும்)

 பட்டை - அரை இஞ்ச் அளவு

 மிளகு - 1  டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

சோம்பு, மிளகு இரண்டையும் தட்டி பொடித்து வைக்கவும். நாட்டுக் கோழியை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். இத்துடன் தேவையான அளவு உப்புமஞ்சள்தூள், மிளகு - கால் டீஸ்பூன் சேர்த்து மூடி போட்டு 25 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கோழித்துண்டுகளை மசாலா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கரைய வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். கலவை முக்கால் பதம் வதங்கியதும், எடுத்து வைத்த சாற்றை ஊற்றி கொதிக்கவிடவும். இத்துடன் சீரகத் தூள், தட்டி வைத்துள்ள சோம்பு மற்றும் மீதமுள்ள மிளகு சேர்த்து 2 அல்லது, 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment