Monday 3 October 2016

பயறு - கீரை தோசை

பயறு - கீரை தோசை

பயறு - கீரை தோசை

 

தேவையானவை:

 

 பச்சைப்பயறு - அரை கப்

 பசலைக்கீரை - 10 இலைகள்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 நெய் - 2 டீஸ்பூன் (அ) நல்லெண்ணெய் தேவையான அளவு

 

செய்முறை:

 

பச்சைப்பயறை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள நெய்/நல்லெண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். பத்து நிமிடம் ஊறவிடவும். பிறகு, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

 

குறிப்பு:

 

பச்சைப்பயறு-பசலைக்கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிக அளவு உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இவை இரண்டுமே அதிகமாக தேவைப்படுபவை.

 

No comments:

Post a Comment