Monday 3 October 2016

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப்

 

தேவையானவை:

 

 முருங்கைக்காய் - 2

 சின்னவெங்காயம் - 3

 பூண்டு - 2

 மிளகுத்தூள் - கால்  டீஸ்பூன்

 பட்டை - ஒரு சிறிய துண்டு

 நெய்/நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

முருங்கைக்காயை நீளமாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே போல், வெந்த முருங்கையின் சதைப்பகுதியை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இனி மிக்ஸியில் முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் மற்றும் சதைப்பகுதியை ஒன்றாகச் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்/எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த முருங்கைக்காய் கூழை ஊற்றிக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொண்டு கொதிக்கவிடலாம். கலவை நன்கு கொதித்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.

 

குறிப்பு:

 

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான கால்சியம்ஸ், விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்த உணவு இது.

 

No comments:

Post a Comment