Sunday 9 October 2016

ஜவ்வரிசி மல்ட்டி ஃப்ரூட் சாலட்

ஜவ்வரிசி மல்ட்டி ஃப்ரூட் சாலட்

ஜவ்வரிசி மல்ட்டி ஃப்ரூட் சாலட்

 

என்னென்ன தேவை?

 

ஆப்பிள் - 1,

அன்னாசிப்பழம் - 2 ஸ்லைஸ்,

ஆரஞ்சு சுளைகள் - 4,

மாம்பழம் - 1 பெரிய துண்டு பொடியாக நறுக்கியது,

திராட்சை  -தேவைக்கு,

சர்க்கரை - 1/2 கப்,

டூட்டி ஃப்ரூட்டி,

மாதுளை முத்துக்கள்,

வாழைப்பழம் இப்படி விருப்பமான பழங்கள் யாவும் தேவைக்கு,

ஜவ்வரிசி - 1 கப்,

பொடித்த நட்ஸ்,

பால் -2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

 

ஜவ்வரிசி 1 கப்புக்கு 1 கப் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊற விடவும். அதிகம் தண்ணீர் கூடாது. அது மிருதுவாக பதமாக ஊறி இருக்கும். அதை நான்ஸ்டிக் பேனில் பரத்தி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். அது சீக்கிரம் வெந்துவிடும். 2 டீஸ்பூன் பாலுடன் அது உதிரி உதிரியாக வந்ததும், அத்துடன் நறுக்கிய பழங்கள், டின் பால் அல்லது சர்க்கரை, நட்ஸ் மற்றும் யாவற்றையும் சேர்த்து குளிர வைத்து  பகவானுக்குப் படைத்து கோடைகாலத்தில் ஸ்பெஷலாய் ஜமாயுங்கள்.

No comments:

Post a Comment