Sunday 9 October 2016

தால் வடா தஹி சாட்

தால் வடா தஹி சாட்

தால் வடா தஹி சாட்

 

என்னென்ன தேவை?

 

பயத்தம்பருப்பு - 2/3 கப்,

உளுந்து - 1/4 கப்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

ஓமம் - 1/4 டீஸ்பூன்,

இஞ்சி விழுது- 1/2 டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2 to 3 (பொடியாக நறுக்கியது),

பெருங்காயம் - ஒரு சிட்டிகை,

சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்,

உப்பு, கருப்பு மிளகு - தேவைக்கு,

எண்ணெய் - பொரிக்க,

தயிர் - 1 அல்லது 2 கப்,

சர்க்கரை - 1 அல்லது 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்),

சீரகம், மிளகாய்தூள் -  சிறிது.

 

எப்படிச் செய்வது?

 

இரு பருப்புகளையும் 8 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, ஓமம், சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து கலக்கவும். இத்துடன் சமையல் சோடா சேர்க்கவும். எண்ணெயை சூடேற்றி இதில் கரண்டியால் மாவை எடுத்து விடவும். பொரிந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். பிறகு குளிரப்படுத்தவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலந்து வெண்ணெய் போல் மென்மையாக வரும்படி செய்யவும். பிறகு இதை வடை மேல் ஊற்றி மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, பச்சை சட்னி சேர்த்து குளிரப்படுத்தி பரிமாறவும்

No comments:

Post a Comment