Monday, 3 October 2016

டீ மக் கேக்

டீ மக் கேக்

டீ மக் கேக்

 

தேவையானவை:

 

 மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

 கோகோ - 2 டேபிள்ஸ்பூன்

 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

 பால் - 4 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 வெனிலா எசன்ஸ் - சிறிது

 உப்பு - ஒரு சிட்டிகை

 பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

 சாக்கோ சிப் - அலங்கரிக்க

 

செய்முறை:

 

சாக்கோ சிப் தவிர்த்து, மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். ஒரு டீ கோப்பையின் உள்ளே வெண்ணெய் தடவி, மைதா மாவை தூவிவிடவும். இக்கலவையை டீ கப்பின் உள்ளே ஊற்றி ஹைபவரில் 3 நிமிடம் வேக வைக்கவும். மேலே சாக்கோ சிப் வைத்து பரிமாறவும்.

 

குறிப்பு:

 

4 டேபிள்ஸ்பூன் பாலுக்கு பதில் ஒரு முட்டை சேர்த்தும் கேக் செய்யலாம்.  சாக்கோ சிப்பை வேக வைக்கும் முன் கேக் மேல் தூவி வேகவைக்கலாம்.

 

 

No comments:

Post a Comment