Saturday, 1 October 2016

சிலோன் பிரின்ஜால் மசாலா

சிலோன் பிரின்ஜால் மசாலா

சிலோன் பிரின்ஜால் மசாலா

 

தேவையானவை:

 

கத்தரிக்காய் - 5

பெரியவெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு - 10 பல்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -

1 டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோம்பு - 1/2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

புளிக்கரைசல் - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

கத்திரிக்காயை நீளமாக வெட்டி தண்ணீரில் போட்டு முக்கி எடுத்து தண்ணீரை வடிய விடவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அந்தக் கலவையில் நீளமாக 6 துண்டுகளாக நறுக்கிய கத்திரிக்காயை நன்கு கலந்து ஊற விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் போட்டுப் பொரிய விடவும். பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் ஊற வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment