Friday 7 October 2016

ஆலு பாலக்

ஆலு பாலக்

ஆலு பாலக்

 

தேவையானவை:

 

மஞ்சள்தூள் போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (பெரிதாக வெட்டவும்)

 

சர்க்கரை - அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 

ஃபிரஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

 

கீறிய பச்சை மிளகாய் - 1

 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு நறுக்கியது

 

பாலக் கிரேவி - 3 குழிக்கரண்டி

 

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். இதில் பாலக் கிரேவி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்  கிளறி, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். வேக வைத்த உருளைக்கிழங்கை நசுக்கிச் சேர்த்துக் கிளறி கிரேவி பதம் வரும் வரை வேக விடவும். கிரேவி சுருங்கி வரும் போது சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி ஃபிரஷ் க்ரீம் சேர்த்துக்  கிளறி உடனே இறக்கி விடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து பயன்படுத்துவதற்கு பதில், எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தும் சேர்க்கலாம்.

 

 

No comments:

Post a Comment