Friday 7 October 2016

மலாய் கோஃப்தா கறி

மலாய் கோஃப்தா கறி

மலாய் கோஃப்தா கறி

 

தேவையானவை:

 

கோஃப்தா தயாரிக்க:

 

வேக வைத்த உருளைக்கிழங்கு - 3 (உருண்டையான உருளைக்கிழங்கு)

 

துருவிய பனீர் - ஒரு கைப்பிடி

 

உடைத்த முந்திரி - 5

 

நறுக்கிய பச்சை மிளகாய் - 1

 

நறுக்கிய கொத்த‌மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

கிஸ்மிஸ் பழம்  (உலர் திராட்சை) - 1 டேபிள்ஸ்பூன்

 

சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்

 

வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

மைதாமாவு - சிறிதளவு

 

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

மலாய் கிரேவி தயாரிக்க:

 

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 

ஷகி கிரேவி - ஒன்றரை குழிக்கரண்டி

 

வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 

ஃபிரஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்

 

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

 

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

கோஃப்தா பால்ஸ் - 3 உருண்டை

 

செய்முறை:

 

உருளைக்கிழங்கை வேக வைத்து லேசாக அதை உடைத்து விடவும். இத்துடன் எண்ணெய், மைதாமாவு, தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும்  சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை தனித்தனி சிலிண்டர் வடிவத்துக்கு பிடித்து மைதாமாவில் புரட்டி எடுக்கவும். இதைச் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா பால்ஸ்.

 

அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துத் தாளிக்கவும். இதில் ஷகி கிரேவியைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கிளறவும். லேசாக கொதிக்கும் போது வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். கரம் மசாலாத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து சிம்மில் வைக்கவும். ஃபிரஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கி வெண்ணெயைச் சேர்த்து உடனே இறக்கி விட வேண்டும். தட்டில் கோப்ஃதாவை அடுக்கி வைத்து, மலாய் கிரேவியை மேலே ஊற்றிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment