Wednesday, 5 October 2016

பனீர் சூப்

பனீர் சூப்

பனீர் சூப்

 

தேவையானவை:

 

மைதா  25 கிராம்

 

வெண்ணெய்  25 கிராம்

 

மிளகு  10 கிராம்

 

பூண்டு  1 (தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும்)

 

பனீர்  25 கிராம் (துருவிக்கொள்ளவும்)

 

மிளகுத்தூள்  1 டீஸ்பூன்

 

பெரிய வெங்காயம்  1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

 

கறிவேப்பிலை சிறிதளவு

 

காய்ச்சிய பால்  200 மில்லி

 

தண்ணீர்  200 மில்லி

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து, வெண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, மிளகு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் மைதா சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு வதக்கி, துருவிய பனீரைச் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் காய்ச்சிய பாலை ஊற்றவும். பால் ஒரு கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment