மசாலா ஃபிரைடு ராஜ்மா தால்
மசாலா ஃபிரைடு ராஜ்மா தால்
தேவையானவை:
ராஜ்மா பயறு 50 கிராம்.
சீரகம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கருப்பு உப்பு அரை டீஸ்பூன்
வெண்ணெய் 30 கிராம்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன்
பெங்களூர் தக்காளி 2 (பொடியாக நறுக்கவும்)
பட்டை 1 பெரிய துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
பிரியாணி இலை 2
செய்முறை:
ராஜ்மாவை இரண்டு முறை தண்ணீரில் கழுவவும். காட்டன் துணியில் ராஜ்மா, ஒரு பெரிய பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை சேர்த்துக் இறுக்கி கட்டவும். ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி, அதில் ராஜ்மா கட்டி வைத்துள்ள துணியைப் போட்டு ஓர் இரவு முழுவதும் மூழ்க வைக்கவும். மறுநாள், ராஜ்மா ஊறிய தண்ணீரை குக்கரில் ஊற்றி, துணியில் கட்டி வைத்துள்ள பொருட்களைச் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளியைச் சேர்த்து அது கரையும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் வெந்த ராஜ்மாவில் உள்ள தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கழித்து, ராஜ்மாவை கொதிக்கும் கலவையில் சேர்த்து உப்புப் போட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன் கருப்பு உப்பு சேர்த்து இறக்கவும். புலாவ், நாண், ரொட்டியோடு சேர்த்து பரிமாறவும்.

No comments:
Post a Comment