கோல்ஸ் லா வித் வினிகர் டிரஸ்ஸிங்
கோல்ஸ் லா வித் வினிகர் டிரஸ்ஸிங்
தேவையானவை:
கேரட் 25 கிராம்
முட்டைகோஸ் 25 கிராம்
குடமிளகாய் 25 கிராம் (மூன்று நிற குடமிளகாய்களும் சேர்த்து)
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சர்க்கரை 1 சிட்டிகை
செய்முறை:
கேரட், முட்டைகோஸ், குடமிளகாய்களை மெல்லியதாக, நீள வடிவில் நறுக்கிக் கொள்ளவும். வினிகர், ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, மிளகுத்தூளை ஒன்றாகக் கலக்கவும். ஒரு ப்ளேட்டில் காய்கறிகளைப் பரப்பி, வினிகர் கலவையை ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment