மோர்க் குழம்பு
மோர்க் குழம்பு
தேவையானவை:
வெண்டைக்காய் - 200 கிராம்
லேசாக புளித்த தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
கறிவேப்பிலை - டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வெண்டைக்காயை நறுக்கிக்கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரிசி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை போன்றவற்றை மிருதுவாக அரைக்கவும்.
தயிரை நன்றாக அடித்து, இதில் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் ஏற்றி இதில் எண்ணெயை ஊற்றி சூடானதும், இதில் கடுகு மற்றும் வெண்டக்காயைச் சேர்க்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் இதில்அடித்து வைத்த தயிரைச் சேர்க்கவும். இதை நன்றாகக் கிளறி, குறைந்த வெப்பத்தில் வைக்கவும். இது கொதிக்க ஆரம்பித்தவுடன், திக்காக மாறும். இதில் கறிவேப்பிலை கொத்தமல்லித்்தழையைத் தூவி, சாதத்துடன் பரிமாறவும்.
இதில் வெண்டைக்காய்க்கு பதில் கத்திரிக்காய், பூசணி, சௌசௌ, முருங்கைக்காய் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment