மைதா-பால் போளி்
மைதா-பால் போளி்
தேவையானவை:
மைதா மாவு - 2.5 கப்
உப்பு - சிறிதளவு
நெய்- 4 டீஸ்பூன்
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - 5 இழைகள்
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
சர்க்கரை- 5 கப்
எண்ணெய் - முக்கால் லிட்டர்
செய்முறை:
மைதாவில் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மென்மையாகப் பிசைந்து கொள்ளவும். அதனுடன் நெய்யைக் கலந்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலைக் கொதிக்கவிடவும். கொதித்ததும், இதில் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். இதில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூவைச் சேர்க்கவும். இதை குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும்.
வாணலியை சுட வைத்து, இதில் எண்ணெய்யை ஊற்றி தீயைக் குறைத்துக் கொள்ளவும். பக்கத்தில், மைதா மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி வடிவில் தட்டி வைத்துக்கொள்ளவும். இதை தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும். இதைப் போலவே மற்ற எல்லா போளிகளையும் செய்யவும்.
பின், ஒவ்வொரு போளியாக கொதிக்கவைத்து இருக்கும் பாலில் ரெண்டு முதல் மூன்று நிமிடம் போடவும். அதிகம் நேரம் போட்டுவிட கூடாது.
அதை ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக ஒரு தட்டில் வைக்கவும். போளியை ஊற வைத்தபின், பால் மீதமானால் அதை போளியின் மேல் ஊற்றி உடனே பரிமாறவும்.

No comments:
Post a Comment