உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்துக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 2 பல் (நசுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - முக்கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
தாளிக்க:
கடுகு - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உடைத்த வெள்ளை உளுந்து - 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, மீடியமான சைஸில் நறுக்கித் துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, உருளைக்கிழங்கில் மசாலா ஒட்டும் வரை வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

No comments:
Post a Comment