மஞ்சள் கரிசலாங்கண்ணி அடை
மஞ்சள் கரிசலாங்கண்ணி அடை
தேவையானவை:
மஞ்சள் கரிசலாங்கண்ணி - 150 கிராம்
காளான் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளிப் பழம் - 100 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
கேழ்வரகு மாவு - 100 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 50 கிராம்
சைனா பூண்டு - 25 கிராம்
குடமிளகாய் - 1
அருகம்புல் பொடி - ஒரு டீஸ்பூன்
நெல்லிக்காய்ப் பொடி - 2 டீஸ்பூன்
அதிமதுரப் பொடி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் கரிசலாங்கண்ணிப் பொடி - ஒரு டீஸ்பூன்
தூதுவளைப் பொடி - ஒரு டீஸ்பூன்
வசம்புத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி நன்றாகப் பிசைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டிக் கொள்ளவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் காளான்களை குக்கர் தட்டில் வைத்து அரை அவியலாக வேகவைத்து எடுக்கவும். மெல்லியதாக சீவிக் கொள்ளவும். குடமிளகாயில் உள்ளே இருப்பதை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் சேர்க்கவும். இத்துடன் அத்தனை பொடி வகைகள், தூள் வகைகள், நசுக்கிய பூண்டு, வேகவைத்த கரிசலாங்கண்ணி, காளான் மற்றும் நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும். இத்துடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், மாவுகளை அடைகளாக வார்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால் சுவையான மஞ்சள் கரிசலாங்கண்ணி அடை தயார்.
குறிப்பு:
அடையுடன் தொட்டுக்கொள்ள சைட் டிஷ் எதுவும் தேவையில்லை. வெறும் அடையாகவே சாப்பிடலாம்.
No comments:
Post a Comment