Saturday, 1 October 2016

வல்லாரை ரொட்டி

வல்லாரை ரொட்டி

வல்லாரை ரொட்டி

 

தேவையானவை:

 வல்லாரை - 50 கிராம்

 மைதா மாவு - 200 கிராம்

 சர்க்கரை - 75 கிராம்

 வெண்ணெய் - 75 கிராம்

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

 நெல்லிக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடியாக்கி வெண்ணெயுடன் சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெல்லிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு, வல்லாரை மசியலையும் சேர்த்துப் பிசையவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தியாகப் பிசைந்து, தோசைக்கல்லில் இருபுறமும் வேகவைத்து சுட்டெடுக்கவும்.

No comments:

Post a Comment