பச்சிலைச் சப்பாத்தி
பச்சிலைச் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - 500 கிராம்
தயிர் - 60 மில்லி
பழுத்த வாழைப்பழம் - 1
நெய் - 2 டீஸ்பூன்
கல்யாண முருங்கை இலை - 5
வல்லாரை இலை - 10
நெல்லிக்காய்த்தூள் - 10 சிட்டிகை
சுக்குத்தூள் - 5
புதினா இலை - 10
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கல்யாணமுருங்கை, வல்லாரை, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை நன்கு கழுவவும். இதை அம்மியில் (அல்லது மிக்ஸியில்) நன்றாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை மாவுடன் தயிர், வாழைப்பழம், நெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து, சுக்கு, நெல்லிக்காய்த்தூள், உப்பு, வடிகட்டிய பச்சிலைத் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். இதை சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தியாகத் தேய்த்தெடுக்கவும். இதை சப்பாத்தியாக சுட்டெடுத்தால் ஆரோக்கியமான பச்சிலைச் சப்பாத்தி தயார்.
குறிப்பு:
இந்த சப்பாத்தி, சளியை அகற்றுவதுடன், வயிற்றுப் புண், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைப் போக்கவல்லது. வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது. இதை சிறுவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
No comments:
Post a Comment