Sunday 9 October 2016

புட்டு

புட்டு

புட்டு

 

என்னென்ன தேவை?

 

புட்டு மாவு - 1 கப்,

துருவிய தேங்காய் - 3/4 கப்,

உப்பு - 1/4 டீஸ்பூன்,

தண்ணீர் - சிறிதளவு,

நாட்டுச் சர்க்கரை- சிறிது,

பாசிப் பயறு-1 டீஸ்பூன்,

நேந்திரம் பழம்-1.

 

எப்படிச் செய்வது?

 

புட்டு மாவை இளஞ்சூட்டில் உள்ள நீரை தெளித்து, உப்பு சேர்த்து உதிரியாக கிளறிக் கொள்ளவும். புட்டு மேக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதித்த பின், இட்லி தட்டில், சுத்தமான துணி போட்டு, தேங்காய், புட்டு மாவு ஆகியவற்றை பரத்தி ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இத்துடன் வேக வைத்த பாசிப் பயறு, நாட்டுச் சர்க்கரை கலந்து நேந்திரம் பழத்துடன் பரிமாறவும்

No comments:

Post a Comment