Sunday 2 October 2016

உப்புக் கண்டம் குழம்பு

உப்புக் கண்டம் குழம்பு

உப்புக் கண்டம் குழம்பு

தேவையானவை:

 உப்புக் கண்டம் - 200 கிராம்

 சின்னவெங்காயம் - 15 (பொடியாக நறுக்கவும்)

 தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

 முருங்கைக்காய் - 1 (சிறிது நீளமாக நறுக்கவும்

 கத்தரிக்காய் - 2 (நீளமாக நறுக்கவும்)

 தேங்காய் - அரை மூடி (துருவி அரைத்துக் கொள்ளவும்)

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 புளிக்கரைசல் - 50 மில்லி

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 உளுந்து - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை- சிறிதளவு

 உப்பு- தேவையான அளவு

 நல்லெண்ணெய் - 25 மில்லி

 

செய்முறை:

உப்புக் கண்டத்தை சூடான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் 5 வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போனதும் உப்புக் கண்டத்தையும் சேர்த்து வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி வெந்தயம், உளுந்து, கறிவேப்பிலை மீதம் உள்ள வெங்காயம், முருங்கைக்காய், கத்திரிக்காய் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். இதில் வெந்த உப்புக் கண்ட கலவையைச் சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.

 

No comments:

Post a Comment