Sunday 2 October 2016

நாட்டுக்கோழிக் குழம்பு

நாட்டுக்கோழிக் குழம்பு


நாட்டுக்கோழிக் குழம்பு

 

தேவையானவை:

 நாட்டுக்கோழி - அரை கிலோ

 சின்னவெங்காயம் - 15 (இரண்டாக நறுக்கவும்)

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 நல்லெண்ணெய் - 25 மில்லி

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

வறுத்து அரைக்க:

 மல்லி (தனியா) - ஒன்றரை டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 4

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன்

 கசகசா - ஒரு டீஸ்பூன்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

வறுக்க தேவையானவற்றை வெறும் வாணலியில வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். கோழியைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள் தடவி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுதுடன், கோழி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

 

No comments:

Post a Comment