Sunday 2 October 2016

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

 

தேவையானவை:

 புளி - எலுமிச்சை அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

 உளுந்து -அரை டேபிள்ஸ்பூன்

 பெருங்காயம்- சிறிதளவு

 எண்ணெய்- தேவையான அளவு

 

வறுத்து அரைக்க:

 மிளகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 உளுந்து - அரை டேபிள்ஸ்பூன்

 வரமிளகாய் - 3 (காரத்துக்கேற்ப )

 கறிவேப்பிலை - சிறிதளவு

 சீரகம் - அரை டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வறுக்க தேவையான பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு, பொரிந்ததும், புளிக்கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வானை போனதும் தீயை மிதமாக்கி, அரைத்து வைத்திருப்பதைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, உப்பு சேர்த்து இறக்கவும்.

 

 

No comments:

Post a Comment